08 September 2011

தனியுடமை


பள்ளியில் படிக்கும்போது
பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டதால்
அந்த மாணவர்களைப்போல்
வாந்தி பேதியால் அவதிப்பட்டு
அரசு மருத்துவமனையில் கிடந்தேன்
அரை மயக்கத்தில்

அரசு வேலைக்காக மட்டுமல்ல
அவசர வேலைக்காகவும்
வாகனம் எதிர்பார்த்துக்
காத்திருந்ததில்
அவர்களைப்போல் எனக்கும்
கடுவலி கொடுக்கிறது கால்

நான் மட்டும் உடுத்த வேண்டி
உலகில் யாரும்
தனியாக தறிபோடவில்லை

தரை முழுக்க நனைத்த
மழைகூட - என்னைத்
தனிமைப்படுத்தவில்லை

அதி உச்சபட்சமாக
அரை மணிநேரம்
அவர்களைப்போல்
என்னாலும் முடியும்
மூச்சடக்க

மற்றவர்களைப்போலவே
ஒரு கோப்பைக்கு மேல்
திகட்டுகிறது தேநீரும்

எல்லோர் போலவும்தான்
எல்லா சுவைகளும்
எல்லைக்குள் இருக்கின்றன
எனக்குள்ளும்

அவர்கள் செல்லும் சாலைதான்
எனக்கும்
நான் காணும் நிலாதான்
அவர்களுக்கும்

வயது முதிர்ந்தாலும்
அவர்களைப்போல் நானும்
உழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்

பிறகெப்படி நான் மட்டும்
வறுமைக் கோட்டுக்குக் கீழ்

- சகா

17 December 2009

சுகம்

உனக்கு

உடம்பு சரியில்லையாமே

மாத்திரைகள் எல்லாம்

தயாராகிவிட்டன

உன்னுள்

சுகமாய் கரைவதற்கு!

வானில் குளித்தேன்

குளிப்பதற்கு
தண்ணீர் சுட்டு வைத்தாய்
எடுப்பதற்கு குனிந்து
சில்லென அதிர்ந்தேன்
அழகு சட்டியில்
அகல வானை
எப்படிச் சிறைப்பிடித்தாய்
வானத்தில் குளிக்கும்
முதல் மனிதன் நான்!

20 November 2009

காதல் பிசாசு













இன்பங்களை இம்சித்து
தனிமையை நரகமாக்கி
தவணைமுறை தற்கொலையின்
தடம் தரும்!

23 May 2009

இடைவெளி

உலகம் சுருங்கி கொண்டுதான்
இருக்கின்றது
இன்றைக்கும் நாளைக்குமான
இடைவெளி நீள்வதுகூட தெரியாமல்

19 May 2009

இடைமறிக்கும் இம்சைகள்

எப்போதுமே
எப்போதும்போல்
இருக்க முடிவதில்லை
ஏதாவது வந்து
இடைமறித்துப் போகிறது
உன் நினைவை
பசி, உறக்கம் இப்படி

30 April 2009

கண்ணாடி கைக்குட்டை

கண்ணாடி கைக்குட்டை
சில்லு சில்லாக உடைந்தாலும்
உன் முகம் மட்டுமே
காட்டும்
என் இதயம்
- சுமிதா

மழை


பாதம்


நட்பும் நட்பு சார்ந்த இடமும்


Add Image

வலி தூரப் பயணம்


தேடல்